மிக ஏழ்மை நிலையில் உள்ள மக்கள், வறுமைக்கோட்டிலிருந்து மீள்வதற்கு அவர்களுக்கு மாதாந்திர சிறப்பு ரொக்கத்தொகை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
வயது, உடல் நிலை காரணமாக வேலை செய்து வருமானத்தை ஈட்டி, குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு வறிய நிலையில் உள்ளவர்களுக்கு இந்த மாதாந்திர ரொக்க உதவித் தொகை வழங்கப்படுவதற்கான பரிதுரையை அரசாங்கம் கொண்டுள்ளது.
ஏழை மக்களை வறுமைக்கோட்டிலிருந்து மீட்க வேண்டும் என்பதற்காக அரசாங்கம் கொண்டுள்ள முக்கிய திட்டங்களில் இந்த ரொக்க உதவித் திட்டமும் அடங்கும் என்று பிரதமர் விளக்கினார்.
இன்று புத்ராஜெயாவில் தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றக்கூட்டத்திற்கு தலைமையேற்றப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.








