Mar 11, 2026
Thisaigal NewsYouTube
30 தோட்டத் தொழிலாளர்களின் பிரச்னைக்கு ​தீர்வு காணப்படும்
தற்போதைய செய்திகள்

30 தோட்டத் தொழிலாளர்களின் பிரச்னைக்கு ​தீர்வு காணப்படும்

Share:
 நெகிரி செம்பிலான், Bahau வட்டாரத்தில் 8 தோட்டங்களைச் சேர்ந்த ரப்பர் பால் மரம் வெட்டுத் தொழிலாளர்களுக்கு இம்மாதம் இறுதியில் வேலை இழப்புக்கு ஆளாகியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டத் தொழிலாளர்களில் 30 குடும்பங்கள் சொந்த வீடுகளை பெறுவதற்கு நெகிரி செம்பிலான் மாநில தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் சிரம்பான் ஜெயா சட்ட மன்ற உறுப்பினர் P.குணசேகரன் உதவியை நாடியுள்ளதாக மாநில செயலாளர் சாந்தகுமார் பச்சையப்பன் தெரிவித்தார்.சம்பந்தப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் பெயர் பட்டியல் சட்ட மன்ற உறுப்பினர் குணசேகரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சாந்தகுமார் பச்சையப்பன் கூறினார்.

லாடாங் St.Hiller ( செயிண்ட் ஹில்லர் ), லாடாங் ஜுவாசெஹ்,லாடாங் சியாலாங், லாடாங் செபாலிங், லாடாங் புக்கிட் பிசா, லாடாங் கெலாமா, லாடாங் னியூ ரொம்பின், லாடாங் கெல்பின் ஆகியவையே அந்த எட்டு​ தோட்டங்களாகும்.

இது தொடர்பாக பேசிய சட்ட மன்ற உறுப்பினர் ​பி. பி.குணசேகரன் 30 தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகள் இல்லை என்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டார். இவ்விவகாரம் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹ​ரூணின் கவனத்திற்கு கொண்டுள்ள செல்லப்படும் என்று விவரித்தார்.

பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் நலனை முன்னெடுத்துள்ள தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்திற்கு குறிப்பாக நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவர் சாந்தகுமார் பச்சையப்பனுக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு