தங்க நகைகள் மீது விதிக்கப்பட்டுள்ள ஆடம்பரப் பொருட்களுக்கான வரியால் தங்க விற்பனையாளர்களுக்கு பெரும் நட்ட, ஏற்படும் என மலேசிய இந்திய தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அப்துல் ரசூல் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
10% வரியானது தங்க நகைக் கடைகளில் நகைகளின் விற்பனை விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் சிங்கப்பூரில் நகை வாங்கவீ அல்லது தவறான முறையைல் நகை வாங்கவோ வாடிக்கையாளர்களை தள்ளும் சூழலை ஏற்படுத்தலாம் என அவர் கூறினார்.
இதனால், தங்க நகை விற்பனையாளர்களுக்கு 10 முதல் 30 விழுக்காசு வரை நட்டத்தை ஏற்படுத்தும். மேலும் அடுத்த ஆண்டு தங்க நகை விற்கப்பட, உற்பத்தியும் குறையும் என்றார் அவர்.
எனவே, இந்த ஆடம்பரப் பொருஃப்களான வரியை தங்கத்தின் மீது விதிக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் அவர் கேட்டுக் கொள்வதாகவும் துறை சார்ந்த வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் இது போன்ற முடிவை அரசாங்கம் எடுக்க வேண்டும் எனவும் அப்துல் ரசூல் அப்துல் ரசாக் குறிப்பிட்டார்.








