Oct 1, 2026
Thisaigal NewsYouTube

பீடோர் துப்பாக்கிச் சூடு: உணவகத் தொழிலதிபர் மீது முன்கூட்டியே கண்காணிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பீடோர் துப்பாக்கிச் சூடு: உணவகத் தொழிலதிபர் மீது முன்கூட்டியே கண்காணிப்பு

பேரா, பீடோர், பீடோர் சென்ட்ரலில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 41 வயது ஆடவர், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வரும் தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பேராக் போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் அல்வி ஸைனால் அபிடின் கூறுகையில், சம்பவத்துக்கு முன்பே அவர் பயணித்த டொயோட்டா லேண்ட் குரூஸர் வாகனம் சந்தேக நபர்களால் பின்தொடரப்பட்டதாகத் தெரிவித்தார்.

சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் பாதிக்கப்பட்டவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், தற்போது அவரது நிலை சீராக இருப்பதாகவும் கூறினார்.

சம்பவத்தில் மூன்று சந்தேக நபர்கள், அவர்களில் ஒரு ஓட்டுநரும் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் பயன்படுத்திய வாகனத்தின் பதிவு எண் போலியானது என்றும் அவர் தெரிவித்தார். இதுவரை ஒன்பது சாட்சிகளிடம் போலீஸ் துறை வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →