Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தலைமையாசிரியர் மயக்கமுற்று மரணம்
தற்போதைய செய்திகள்

தலைமையாசிரியர் மயக்கமுற்று மரணம்

Share:

தம்பின், ஆகஸ்ட்.18-

தலைமையாசிரியர் ஒருவர், மயக்கமுற்றவாறு தனது அலுவலகத்தில் மரணமுற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். தம்பின், கம்போங் பாரு கெடோக் சீன தொடக்கப்பள்ளியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

44 வயதுடைய அந்த தலைமையாசிரியர், பள்ளி அளவில் நேற்று கொண்டாடப்பட்ட தொழில்முனைவர்கள் விழாவில் கலந்து கொண்டார். உடல் சுகவீனப்பட்டு இருப்பதாகக் கூறி, தனது அலுவலகத்திற்குச் சென்றவர், பின்னர் திரும்பவில்லை. அவரின் அலுவலகத்திற்குச் சென்று பார்த்த போது அவர் மரணமுற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வைத் தொடக்கி வைப்பதற்கு தம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் இசாம் முகமட் இசா காலை 11 மணியளவில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே இந்தச் சம்பவம் நிகழ்ந்து, பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related News