Jul 29, 2026
Thisaigal NewsYouTube
விதிமுறைகளை சுகாதார அமைச்சின் சட்ட ஆலோசகர் ஆராய்ந்து வருகின்றார்
தற்போதைய செய்திகள்

விதிமுறைகளை சுகாதார அமைச்சின் சட்ட ஆலோசகர் ஆராய்ந்து வருகின்றார்

Share:

2024ஆம் ஆண்டு பொது சுகாதாரத்தை முன்னிறுத்தும் புகைபிடித்தல் பொருட்கள் கட்டுப்பாடு சட்டத்திற்கான விதிமுறைகள் மற்றும் அமலாக்கம் குறித்த இறுதி வரைவை, சுகாதார அமைச்சின் சட்ட ஆலோசகர் தற்போது ஆராய்ந்து வருவதாக, சுகாதார அமைச்சர் டத்தோ செரி டுசுல்கெஃப்லி அஹ்மத் தெரிவித்தார்.

அந்த வரைவு ஆராய்ந்து, இறுதி செய்த பிறகு, அதனை அமலாக்கம் செய்வதற்கு, சட்டத்துறை தலைவரின் அலுவலகத்திடமிருந்து அங்கீகாரம் பெறப்படும் என்றாரவர்.

அங்கீகாரத்தைப் பெற்ற பின், சம்பந்தப்பட்ட வரைவு குறித்து, புகையிலை தடுப்பு தொடர்பான அனைத்து அரசு சாரா அமைப்புகளுக்கும் விளக்கம் அளிக்கப்படும்.

அச்சட்டம் சுமூகமாக அமலாக்கம் காண்பதை உறுதிபடுத்த, மாநில சுகாதார துறை, ஊராட்சித் துறை முதலானோருடன் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி தொடங்கி மே மாதம் 23ஆம் தேதி வரையில் சுகாதார அமைச்சு, பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக, டுசுல்கெஃப்லி அஹ்மத் கூறினார்.

புகைபிடித்தல் பொருட்கள் கட்டுப்பாடு சட்டம், புகையிலை பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் தடை விதிக்கின்றது.

வயது குறைந்த சிறார்களுக்கு, புகையிலை சார்ந்த பொருட்கள் அல்லது புகையிலை மாற்று பொருட்கள் அல்லது அது தொடர்பான சேவைகளை வழங்கும் நடவடிக்கைகளுக்கும் அச்சட்டம் தடை விதிக்க வகை செய்யவுள்ளது.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்