Oct 7, 2026
Thisaigal NewsYouTube

பலாப்ஸ் பயிற்சியாளர் ஷம்சுல் உடலில் இரண்டாவது சவப் பரிசோதனை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பலாப்ஸ் பயிற்சியாளர் ஷம்சுல் உடலில் இரண்டாவது சவப் பரிசோதனை

கோலாலம்பூர், ஆகஸ்ட்.30-

ஜோகூர், ஸ்கூடாய், மலேசிய தொழிற்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பலாப்ஸ் (Palapes) பயிற்சியாளர் ஷம்சுல் ஹரிஸ் ஷம்சுடின் உடலில் இரண்டாவது சவப் பரிசோதனை, இன்று காலையில் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் தொடங்கியது.

நாட்டின் முன்னணி சவப் பரிசோதனை தடயவியல் நிபுணர் டத்தோ ஶ்ரீ டாக்டர் புபிந்தர் சிங் மற்றும் அந்த மாணவனின் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் காலை 9 மணிக்கு சவப் பரிசோதனை தொடங்கியதாக அந்த மாணவனின் குடும்ப வழக்கறிஞர் டத்தோ நரான் சிங் அரா சிங் தெரிவித்தார்.

சவப் பரிசோதனை முடிவுற அதிக நேரம் ஆகலாம் என்று கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ நரான் சிங் மேலும் கூறினார்.

சவப் பரிசோதனை முடிவுற்றதும் அந்த மாணவனின் உடல் மீண்டும் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 22 வயதுடைய அந்தப் பயிற்சி மாணவன் துன்புறுத்தலுக்கு ஆளாகி, மரணமுற்றதாக அவரின் குடும்பத்தினர் சந்தேகித்ததைத் தொடர்ந்து அந்த மாணவனின் உடலைக் கல்லறையிலிருந்து தோண்டுவதற்கு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

“அவர்  இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

“அவர் இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் கார் தீப்பிடிப்பு; 3 பெண்களுக்கு மூச்சுத் திணறல்

அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் கார் தீப்பிடிப்பு; 3 பெண்களுக்கு மூச்சுத் திணறல்

இசிஆர்எல் பயணக் கட்டணம் இம்மாதம் அறிவிப்பு; நவம்பரில் டிக்கெட் விற்பனை

இசிஆர்எல் பயணக் கட்டணம் இம்மாதம் அறிவிப்பு; நவம்பரில் டிக்கெட் விற்பனை

அக்டோபர் 9 முதல் பருவமழை இடைக்கால மாற்றம்; இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு

அக்டோபர் 9 முதல் பருவமழை இடைக்கால மாற்றம்; இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு