ஆடவர் ஒருவரை கொலை செய்ததாக குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட இரு இந்தியர்கள், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் திருத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவ்விருவரும் குற்றத்தை இன்று ஒப்புக்கொண்டனர்.
44 வயது திவாகர் அப்துல்லா மற்றும் 27 வயது ஜி. சூரிய சேகரன் ஆகியோருக்கு எதிரான கொலை குற்றச்சாட்டு நோக்கமில்லா கொலை குற்றச்சாட்டாக திருத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஈப்போ உயர் நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
திவாகரும், சூரிய சேகரனும் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி பேரா, மஞ்சோங், பூசாட் பண்டார் மஞ்சோங் என்ற இடத்தில் 47 வயது லிங் ஹுவா சாய் என்பவருக்கு மரணம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.
மரணத்தண்டனையை ரத்து செய்வதற்கு நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா கொண்டு வரப்படுவதற்கு முன்பு, இந்த இரு நபர்களும் கட்டாய மரணத் தண்டனை விதிக்க வகைசெய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


