Oct 16, 2026
Thisaigal NewsYouTube

தப்பியோடிய தடுப்புக்கைதி, டுரியான் தோட்டத்தில் பிடிபட்டான்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தப்பியோடிய தடுப்புக்கைதி, டுரியான் தோட்டத்தில் பிடிபட்டான்

மலாக்கா, நவ.28-


கடந்த திங்கட்கிழமை, மலாக்கா, அலோர் காஜா, நீதிமன்ற வளாகத்திலிருந்து மிக சாதூரியமாக தப்பி, கம்பி நீட்டிய தடுப்புக்கைதி ஒருவர், நேற்று புதன்கிழமை, மாலை 6.30 மணியளவில் அலோர் காஜா, தாமன் மலாக்க பீண்டாவில் உள்ள ஒரு டுரியான் தோட்டத்தில் பதுங்கியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

அந்த டுரியான் தோட்டத்தில் அவன் மறைந்திருத்த போது, அவனிடம் கைவிலங்கு காணப்படவில்லை. ஓர் இந்தோனேசியரான 38 வயதுடைய அந்த தடுப்புக் கைதி, அலோர் காஜா மாவட்ட போலீசாரால் தொடங்கப்பட்ட ஓப் கெசான் நடவடிக்கையின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டு வளைத்துப்பிடிக்கப்பட்டான்.
அந்த தடுப்புக்கைதி, டுரியான் தோட்டத்தில் பதுங்கியிருக்கிறான் என்று தகவல் கிடைத்து, அந்த பழந்தோட்டத்தை போலீசார் சூழ்ந்தனர்.

போலீசாரின் வருகையை பார்தது விட்ட அந்த தடுப்புக்கைதி, பழந்தோட்டத்திலிருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தப் போது, அவன் போலீசாரால் வளைத்துப்பிடிக்கப்பட்டான் என்று மலாக்கா மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்தோ முகமட் நஸ்ரி நவாவி தெரிவித்தார்.

சுங்கத்துறையின் தடுப்புக்காவலிருந்து தப்பித்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவதற்கு ஏதுவாக அவன் குற்றவியல் சட்டம் 224 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளான் என்ற டத்தோ முகமட் நஸ்ரி குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →