Aug 6, 2026
Thisaigal NewsYouTube
சித்தி மஸ்துராவிற்கு நிதி திரட்டும் நடவடிக்கையை பாஸ் தொடங்கியது
தற்போதைய செய்திகள்

சித்தி மஸ்துராவிற்கு நிதி திரட்டும் நடவடிக்கையை பாஸ் தொடங்கியது

Share:

பினாங்கு, டிச. 23-


பினாங்கு, கப்பாளபத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்துரா முகமட்டிற்கு நிதி திரட்டும் நடவடிக்கையை பாஸ் கட்சித் தொடங்கியது.
டிஏபி தலைவர்கள் தொடுத்துள்ள அவதூறு வழக்கில் சித்தி மஸ்தூரா தோல்விக் கண்டதைத் தொடர்ந்து அவர் திவால் ஆகுவதை தடுக்க, இழப்பீட்டுத் தொகையான எட்டு லட்சத்து 25 ஆயிரம் ரிங்கிட்டை செலுத்துவதற்கு நிதி திரட்டும் நடவடிக்கையை பாஸ் தொடங்கியிருப்பதாக அதன் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.

டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங், அவரின் புதல்வரும் டிஏபி தலைருமான லிம் குவான் எங் மற்றும் செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கொக் ஆகியோர் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் மறைந்த சின் பெங்கின் உறவினர்கள் என்று சித்தி மஸ்துரா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

கெமாமான் இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது சித்தி மஸ்துராமுன்வைத்த அந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவருக்கு எதிராக டிஏபி தலைவர்கள் அவதூறு வழக்கைத் தொடுத்தனர்.

Related News