May 26, 2026
Thisaigal NewsYouTube
திறப்பு விழா கண்டது கே.பி.ஆர். வாழையிலை உணவகம்
தற்போதைய செய்திகள்

திறப்பு விழா கண்டது கே.பி.ஆர். வாழையிலை உணவகம்

Share:

கிள்ளான்,டிச. 13-
கடந்த 23 ஆண்டு காலமாக தரமான மற்றும் சிறப்பான உணவு கேட்டரிங் சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, மூன்று உணவகங்களை வெற்றிகரமாக நடத்தி வரும் கண்ணுசாமியை உரிமையாளராக கொண்ட KPR Food Caterers நிறுவனம், தங்களின் நான்காவது உணவகமான KPR Banana Leaf Restaurant உணவகத்தை எண். 75, Jalan Bendahara 45, Taman Sejati, Kota Raja, கிள்ளான் என்ற முகவரியில் அதிகாரப்பூர்வமாக திறந்துள்ளது.

டைனமிக், ஏழாம் உணர்வு விழித்தொழுதல் பயிற்சியின் மூலம் ஆற்றல் வாய்ந்த பலரை உருவாக்கியவரும், உணவக உரிமையாளர் கண்ணுசாமியின் ஆஸ்தான வழிகாட்டலுக்கு உரியவருமான “மனித நேயர்” டைனமிக் ஆன்மிக மாஸ்டர் கேப்ரியல் S.S. அவர்களால் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி புதன்கிழமை KPR Banana Leaf Restaurant வாழையிலை உணவகம் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது.

ஏற்கனவே கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கியில் மாமாக் உணவக பாணியில் Restaurant Maju Dinamik எனும் உணவகம் உட்பட கிள்ளானில் மூன்று உணவகங்களை கண்ணுசாமி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இந்த மூன்று உணவகங்கள் ஒவ்வொன்றும், ஒரு கோட்பாடு அடிப்படையில் திறக்கப்பட்டுள்ளதாக கண்ணுசாமி கூறுகிறார். Coffe Hause, Cafe மற்றும் சிக்கன உணவு முறையான Economic Rice Concept ஆகிய மூன்று வெவ்வேறு பாணிகளில் மூன்று உணவகங்களும் செயல்படுவதாக கண்ணுசாமி குறிப்பிட்டார்.

எனினும் தங்கள் நிறுவனத்தின் இந்த நான்காவது உணவகமான KPR Banana Leaf Restaurant, சுயசேவை அடிப்படையில் திறக்கப்பட்டுள்ள வாழையிலை உணவகமாகும் என்று விவரித்தார் KPR Food Caterers நிறுவனம் உரிமையாளர் கண்ணுசாமி.

இதுநாள் வரை தங்களின் KPR Food Caterers நிறுவனத்திற்கு ஆதரவு வழங்கி வரும் வாடிக்கையாளர்கள், கோத்தாராஜாவில் செயல்படும் KPR Banana Leaf Restaurant உணவகத்திற்கும் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று கண்ணுசாமி கேட்டுக்கொண்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு