Sep 27, 2026
Thisaigal NewsYouTube
எச்.ஆர்.டி கார்ப் புதிய தலைவராக ருஸ்லி ஜாஃபர் நியமனம்
தற்போதைய செய்திகள்

எச்.ஆர்.டி கார்ப் புதிய தலைவராக ருஸ்லி ஜாஃபர் நியமனம்

Share:

எச்.ஆர்.டி கார்ப் நிறுவனத்தின் புதிய தலைவராக ருஸ்லி ஜாஃபர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவரது நியமனமானது கடந்த ஏப்ரல் 1 -ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நியமனம் திறன் மேம்பாடு, பணியாளர் பயிற்சி மற்றும் மனித வள நிலைத்தன்மையை முன்னெடுக்க நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக எச்.ஆர்.டி கார்ப் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், இந்த முடிவு தேசிய முன்னுரிமைகளுக்கும், தொடர்ந்து மாறிவரும் வேலைவாய்ப்பு வழங்குநர்கள் மற்றும் பணியாளர்களின் தேவைகளுக்கும் ஏற்ப எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுத்துறையில் 32 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவரான ருஸ்லி, இதற்கு முன்னர் 2022 முதல் 2025-ஆம் ஆண்டு வரை மலேசியக் கூட்டுறவுச் சங்கங்கள் ஆணையமான SKM-இன் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியவர் என்றும் எச்.ஆர்.டி தெரிவித்துள்ளது.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்