கோலாலம்பூர், ஆகஸ்ட்.10-
சாலை வரியும் காப்பீடும் இல்லாமல் செலுத்தப்பட்ட ஃபெர்ராரி, போர்ஷே, ஃபோர்ட் முஸ்தாங் போன்ற 258 சொகுசு வாகனங்களைச் சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜே அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் நாடு முழுவதும் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட ஓப்ஸ் லக்ஸரி சோதனையின் போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதன் மூத்த இயக்குனர் முகமட் கிஃப்லி மா ஹசான் தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட சில வாகனங்களின் சாலை வரிகள் 2022ஆம் ஆண்டு முதல் காலாவதியானதாகவும், 'மறந்துவிட்டதாக' உரிமையாளர்கள் கூறியதாகவும் ஜேபிஜே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வாகனங்கள் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணைக்காக ஜேபிஜே கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன.








