Sep 26, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்கள் நடுரோட்டில் மோதல்: எஸ்.எம்.கே அமான் ஜெயா மாணவர்கள் வன்முறை
தற்போதைய செய்திகள்

மாணவர்கள் நடுரோட்டில் மோதல்: எஸ்.எம்.கே அமான் ஜெயா மாணவர்கள் வன்முறை

Share:

பள்ளி மாணவர்கள் சீருடையுடன் நடுரோட்டில் ஒருவருக்கொருவர் கடுமையாக மோதிக் கொள்ளும் காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சுங்கை பட்டாணி ,சுங்கை லாலாங்கில் உள்ள எஸ்.எம்.கே அமான் ஜெயா பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மாணவர்கள் இவ்வாறு பொது இடத்தில் வன்முறையில் ஈடுபடுவதைப் பார்ப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. இது போன்ற வன்முறைக் காணொளிகள் வெளியாவது சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்துவதுடன், மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை குறித்த கேள்விகளையும் எழுப்புகின்றன என்று அந்த காணொளி குறித்து பலர் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளின் எதிர்காலத்தையும் நன்னடத்தையையும் உருவாக்குவதில் பெற்றோர்களுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது. இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களில் மாணவர்கள் ஈடுபடுவதைத் தடுக்க, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் செயல்பாட்டை தீவிரமாக கண்காணிக் வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related News