காப்புறுதிப் பணத்தைக் கோருவதற்காக தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதாக போலீசில் பொய் புகார் செய்த ஆடவர் பிடிபட்டார். 33 வயதுடைய அந்த நபர், கெந்திங் ஹைலண்ட்ஸ், கெந்திங் பெர்மாய் என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனதாக போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போது, அது பொய் புகார் என்பது கண்டு பிடிக்கப்பட்டதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஹாம் முகமட் கஹார் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் ஓர் இடத்தில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமாராவை சோதனை செய்த போது, அன்றைய தினம் அப்படியொரு மோட்டார் சைக்கிள் அவ்விடத்தில் நிறுத்தப்படவில்லை என்பது நிரூபணமானது. மோட்டார் சைக்கிளுக்கு செலுத்த வேண்டிய தவணைப்பணம் நிலுவையில் இருந்ததால் அதனை தவிர்க்க காப்புறுதி பணத்திற்காக அந்த நபர் இப்படியொரு நாடாகமாடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது என்று ஸைஹாம் முகமட் கஹார் குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


