May 24, 2026
Thisaigal NewsYouTube
லின்சன் ஷோரிங் சிஸ்டம் அறிமுகம், வீரப்பன் தொடக்கி வைத்தார்
தற்போதைய செய்திகள்

லின்சன் ஷோரிங் சிஸ்டம் அறிமுகம், வீரப்பன் தொடக்கி வைத்தார்

Share:

போர்ட் டிக்சன் , ஆகஸ்ட் 29-

நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சனை சேர்ந்த பிரபல Linsum Engineering Sdn. Bhd. நிறுவனம், அதன் புதிய லின்சன் ஷோரிங் சிஸ்டம் முறையை அறிமுகப்படுத்தியது. MBAM ONE BUILD கண்காட்சியையொட்டி நேற்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், Repah சட்டமன்ற உறுப்பினருமான S. வீரப்பன் இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இந்த அறிமுக நிகழ்வானது, சிவில் இன்ஜினியரிங் துறையில் புதுமை மற்றும் அதன் மேம்பாட்டு முக்கியத்துவத்தை அடிக்கோடியிட்டு காட்டுகிறது என்பதுடன் உள்ளூர் தொழில்துறையை ஊக்குவிப்பதில் அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டையும் எடுத்துரைப்பதாக உள்ளது என்று வீரப்பன் தமது உரையில் தெரிவித்தார்.

Linsun Shoring System என்பது பல்வேறு சிவில் இன்ஜினியரிங் திட்டங்கள் மிகத்துல்லியமாக அமைவதை உறுதி செய்வதற்கு பரவலாக செயலி பயன்பாட்டிற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு முறையாகும். அத்துடன் தொழில்துறை சவால்களுக்கு பல்வேறு துறைகளில் நம்பகமான தீர்வுகளையும் இது வழங்குகிறது என்று வீரப்பன் சுட்டிக்காட்டினார்.

தவிர, கட்டமானத்துறையில் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு வடிவமைக்கப்பட்ட இந்த புத்தாக்கம், இத்துறையில் புதிய தரத்தை நிர்ணயிக்கிறது என்று வீரப்பன் புகழாரம் சூட்டினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட Linsum Engineering Sdn. Bhd நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ M. சதிஷ்குமார் தமது உரையில் லின்சன் ஷோரிங் சிஸ்டம் முறையை சந்தையில் அறிமுகப்படுத்துவதில் தாங்கள் அளவற்ற மகிழ்ச்சி கொள்வதாக குறிப்பிட்டார்.

இந்த அறிமுக நிகழ்வு, விழாவில் கலந்து கொண்ட தொழில் அதிபர்கள், பங்குதாரர்கள் மற்றும் ஊடகப்பிரதிநிதிகளின் பெரும் கவன ஈர்ப்பாக அமைந்தது. .

Related News