Dec 5, 2025
Thisaigal NewsYouTube
ரோந்துப் போலீசார் தம்பதியரை விரட்டிச் சென்று பிடித்தனர்
தற்போதைய செய்திகள்

ரோந்துப் போலீசார் தம்பதியரை விரட்டிச் சென்று பிடித்தனர்

Share:

மலாக்கா, ஜூலை.18-

கடந்த காலங்களில் பல்வேறு குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ளதாக நம்பப்படும் ஒரு தம்பதிரைய 5 எம்பிவி ரோந்து போலீஸ் கார்கள் விரட்டிச் சென்று வளைத்துப் பிடித்தன.

இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் மலாக்காவில் நிகழ்ந்தது. இதில் பிடிபட்ட 28 வயதுடைய நபருக்கு 18 குற்றப்பதிவுகள் உள்ளன. அவரின் 27 வயது மனைவிக்கு 4 குற்றப்பதிவுகள் இருப்பதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டொப்பர் பாதிட் தெரிவித்தார்.

5 போலீஸ் ரோந்துக் கார்களில் ஒன்றை அந்த தம்பதியர் பயணித்த புரோட்டோன் வீரா கார் மோதிய போது, அவர்களால் தொடர்ந்து தப்பிக்க இயலாத நிலையில் மற்ற எம்பிவி கார்கள் வழிமறித்ததாக அவர் குறிப்பிட்டார்.

குற்றவியல் அச்சுறுத்தல் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த அந்த தம்பதியர், லிப் மால் பாச்சாங்கில் இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர்களின் காரைப் போலீசார் பின் தொடர்ந்ததாக ஏசிபி கிரிஸ்டொப்பர் பாதிட் விளக்கினார்.

Related News