கோலாலம்பூர், ஜூலை.24-
கடந்த வாரம் தங்கள் 7 வயது மகளை டுரியான் தோளைப் பயன்படுத்தி, சித்ரவதை செய்து வந்த குற்றத்திற்காக வளர்ப்பு தந்தையான ஆடவர் ஒருவருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
இந்தச் செயலுக்கு உடந்தையாக இருந்த அந்தச் சிறுமியின் சொந்தத் தாயாருக்கு 18 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் 3 மாத சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.
42 வயது புன்யாமின் சுகிமான் மற்றும் அவரின் 32 வயது மனைவி யோரினி அப்துல்லா ஆகியோரே இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜுலை 16 ஆம் தேதி மாலை 6 மணியளவில் ஜாலான் அம்பாங்கில் உள்ள தங்கள் வீட்டில் அவர்கள் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றப் பதிவில் கூறப்பட்டுள்ளது.








