Oct 2, 2026
Thisaigal NewsYouTube

அரசு ஊழியர்களுக்குப் பிரதமரின் அதிரடி உத்தரவு: திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும்!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அரசு ஊழியர்களுக்குப் பிரதமரின் அதிரடி உத்தரவு: திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும்!

கோலாலம்பூர், டிசம்பர்.07-

அரசாங்கத்தின் கொள்கைகளும் 167 புதிய மக்கள் நலத் திட்டங்களும் மக்களைச் சென்றடைவதை உறுதிச் செய்வது அரசு ஊழியர்களின் தலையாய கடமை என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு விமர்சனங்களும் கருத்து வேறுபாடுகளும் இருந்த போதிலும், இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அரசு ஊழியர்கள் உறுதிப் பூண்டு இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஆனால், அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் சில நேரங்களில் தாமதம் ஏற்படுவதால், மக்களிடையே அதிருப்தியும் கோபமும் எழுகின்றன என்று அவர் சுட்டிக் காட்டினார். சமூக ஊடகங்கள் பெரும்பாலும் ஆக்கப்பூர்வமான கருத்துகளுக்குப் பதிலாக அவதூறுகளைப் பரப்பப் பயன்படுத்தப்படுவதால், அரசுத் திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்துவதன் மூலம் மக்களின் அதிருப்தியைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →