இங்குள்ள ஜாலான் உலுயாம் - கோம்பாக் சாலையில் பெண்மணி ஓட்டிச் சென்ற கார் மீது மரம் விழுந்தர்கில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
இது குறித்து தகவல் வெளியிட்ட சிலாங்கூர் மலேசிய தீயணைப்பு - மீட்புப் படையின் கெத்துவா புசாட் பூசாட் கெராக்கான் ஓபெராசி சுல்ஃபிக்கார் ஜாஃப்ஃபார் தெரிவிக்கயில், மாலை 6.14 மணிக்கு இந்த சம்பவம் தொடர்பாக தமது தரப்புக்கு அழைப்பு வந்ததாகக் குறிப்பிட்டார்.
கோலா குபு பாரு நிலையத்தில் இருந்து 5 அதிகாரிகள் சமபவ இடத்திற்கு உடனே விரைந்துள்ளனர்.
40 வயது தக்க பெண்மணி ஓட்டி வந்த பெரோடுவா அல்சா வகை கார் மீது பெரிய மரம் ஒன்று விழுந்திருந்தது. விழுந்த மரத்தை வெட்டி எடுத்து உள்ளே சிக்கி இருந்ததப் பெண்மணியை மீட்கும் முயற்சியில் மீட்ப்புப் படை அதிகாரிகள் இறங்கினர்.
வெளியில் கொண்டு வரப்பட்ட அந்தப் பெண்மணி சமப இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.








