சிரம்பான், அக்டோபர்.23-
லைசென்ஸின்றி சட்டவிரோதமாக மொத்த வியாபாரத்திற்குரிய டீசல் எண்ணெயை வைத்திருந்ததாக இரண்டு லோரி ஓட்டுநர்களுக்கு சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று அபராதம் விதித்து.
33 வயது U.C. கேசவன் மற்றும் 34 வயது பார்தீபன் ஆகிய இருவரும் நீதிபதி டத்தின் சுரிதா புடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கேசவனுக்கு 45 ஆயிரம் ரிங்கிட் அபராதமும், பார்தீபனுக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
1974 ஆம் ஆம் ஆண்டு விநியோக கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் தங்கள் கைவைசம் அளவுக்கு அதிகமாக உதவித் தொகைக்குரிய டீசல் எண்ணெய்யை வைத்திருந்ததாக இருவரும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.








