Jul 29, 2026
Thisaigal NewsYouTube
நெறிமுறைகளை வழுவாது கட்டிக்காாக்குமாறு வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

நெறிமுறைகளை வழுவாது கட்டிக்காாக்குமாறு வலியுறுத்து

Share:

ஜன.16
இவ்வாண்டு தமிழர்கள் அனைவரும் உவப்புடன் கொண்டாடும் பத்துமலைத் தைப்பூசத் திருவிழாவில் நெறிமுறைகளை வலுவாது கட்டிக்காக்குமாறு கோலாலம்பூர், ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா, பக்தர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தைப்பூச விழா வரும் ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடப்படும் வேளையில் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் கூடுமானவரையில் மஞ்சல் நிறை ஆடையினை அணிந்து வந்து தங்கள் வேண்டுதல்களையும், பிரார்த்தனைகளையும் செய்து கொள்ளுமாறு டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு செய்வது நமது பாரம்பரிய சமய. கலாச்சார விழுமியங்களை மென்மேலும் கட்டிக் காக்கும் வழி வகைகளில் ஒன்றாக அமையும் என்று தேவஸ்தானம் கருதுவதாக டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்..

அதேவேளையில் காவடி, பால்குடம், அர்ச்சனை போன்றவற்றுக்கு எந்த விலையேற்றமும் இல்லை. கடந்த ஆண்டுகளில் எவ்வாறு நடைபெற்றதோ அதேபோன்று இவ்வாண்டும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டான்ஸ்ரீ நடராஜா விவரித்ததார்.

லட்சக்கணக்கான மக்கள் கூடவிருக்கின்ற பத்துமலை தைப்பூச விழா, எல்லா வகையிலும் சிறக்க பக்தர்களின் ஒத்துழைப்பை தேவஸ்தானம் பெரிதும் எதிர்பார்ப்பதாக டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக்கொண்டார்.

Related News

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!

அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்