Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கோத்தா கெமுனிங் தொகுதியில் 450 பேருக்குத் தீபாவளி பற்றுச் சீட்டுகள்
தற்போதைய செய்திகள்

கோத்தா கெமுனிங் தொகுதியில் 450 பேருக்குத் தீபாவளி பற்றுச் சீட்டுகள்

Share:

அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும்
தீபாவளி திருநாளை முன்னிட்டு கோத்தா கெமுனிங் தொகுதியைச் சேர்ந்த 450 பேருக்கு இலவச பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

பற்றுச் சீட்டுகளை பெற்றுக் கொண்ட அனைவரும் கடந்த சனிக்கிழமை
தாமான் ஸ்ரீ மூடாவிலுள்ள மைடின் பேரங்காடியில் தங்களுக்குத்
தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் கொண்டனர்.

இந்த நிகழ்வுக்கு வருகை புரிந்து பொது மக்களுடன் உரையாற்றிய
கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்நாதன்,
வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ள நடப்புச் சூழலில் மிகவும்
அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருள்களை மட்டுமே வாங்கும்படி
கேட்டுக் கொண்டார்.

அதேவேளையில் தீபத் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும்
தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News