Aug 6, 2026
Thisaigal NewsYouTube
கார் தடம் புரண்டதில் ஆடவர் பலி
தற்போதைய செய்திகள்

கார் தடம் புரண்டதில் ஆடவர் பலி

Share:

கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டதில் இந்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்த வேளையில் இதர நால்வர் படுக்காயத்திற்கு ஆளாகினர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 4.40 மணியளவில் கோம்பாக் அருகில் ஜாலான் கெந்திங் ஹிலன்ஸ் - கெந்திங் செம்பா என்ற இடத்தில் நிகழ்ந்தது.

புரோத்தோன் சகா ஃப்.எல்.எக்ஸ் ரக காரில் பயணித்த 20 வயது மதிக்கத்தக்க 5 பேரில் யாகேஷ் சரவணன் உயிரிழந்தார். இதர நால்வர் கடுமையான காயங்களுடன் செலாயாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் நோர் அரிஃபின் தெரிவித்தார்.

Related News