Dec 4, 2025
Thisaigal NewsYouTube
7 குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி முகைதீன் பிரதிநிதித்துவ மனு
தற்போதைய செய்திகள்

7 குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி முகைதீன் பிரதிநிதித்துவ மனு

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.06-

நாட்டின் எட்டாவது பிரதமராகத் தாம் பொறுப்பேற்று இருந்த போது அதிகார துஷ்பிரயோகம் மற்றம் சட்டவிரோதப் பணமாற்றத்தில் ஈடுபட்டதாக 7 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள டான் ஶ்ரீ முகைதீன் யாசின், அந்த 7 குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்யக் கோரி, சட்டத்துறை அலுவலகத்தில் பிரதிநிதித்துவ முனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

டான் ஶ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிரான இவ்வழக்கு இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கே. முனியாண்டி முன்னிலையில் நடைபெற்ற போது, துணை பப்ளிக் பிராசிகியூட்டர் டத்தோ வான் ஷாஹாருடின் வான் லாடின் இதனைத் தெரிவித்தார்.

சட்டத்துறைத் தலைவரின் பரிசீலனைக்காக இந்த பிரதிநிதித்துவ மனுவை தனது வழக்கறிஞர் மூலம் டான் ஶ்ரீ முகைதீன் சமர்ப்பித்துள்ளதாக டத்தோ வான் ஷாஹாருடின் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டத்துறைத் தலைவரின் முடிவு தெரியும் வரை இவ்வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி கே. முனியாண்டி அறிவித்தார்.

Related News