Oct 3, 2026
Thisaigal NewsYouTube

தாய்லாந்து – கம்போடியா அமைதி ஒப்பந்தத்தை நிலைநிறுத்துவதில் மலேசியா உறுதி!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தாய்லாந்து – கம்போடியா அமைதி ஒப்பந்தத்தை நிலைநிறுத்துவதில் மலேசியா உறுதி!

கோலாலம்பூர், நவம்பர்.12-

கம்போடிய எல்லையில் நில வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ள போதிலும், தாய்லாந்து – கம்போடியா இடையிலான அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதில் மலேசியா உறுதியாக இருப்பதாக ஆயதப்படைத் தளபதி ஜெனரல் டான் ஶ்ரீ முகமட் நிஸாம் ஜாஃபார் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட மலேசியா, அதில் தொடர்ந்து முன்னேற்றத்தைக் காண விரும்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியானில் உறுப்பினராக இருக்கும் மலேசியா, அண்டை நாடுகளுக்கு உதவி செய்து, அங்கு அமைதி நிலவுவதை உறுதிச் செய்யும் பொறுப்பில் இருக்கிறது என்றும் நிஸாம் ஜாஃபார் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை, தாய்லாந்து – கம்போடியா எல்லைப் பகுதியில் நிகழ்ந்த நில வெடிச் சம்பவத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த இரண்டு இராணுவ வீரர்கள் காயம் அடைந்ததையடுத்து, அமைதி ஒப்பந்தத்தை நிறுத்துவதாக தாய்லாந்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →