கோத்தா கினபாலு, செப்டம்பர்.13-
சபாவில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கும் போது, உடனடியாக அங்கிருந்து வெளியேற தயார் நிலையில் இருக்குமாறு துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவுறுத்தியுள்ளார்.
மக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்றும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தொடர்ந்து தான் கண்காணித்து வருவதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை குழு தலைவருமான அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, மீட்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 400-க்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் வழங்குவார்கள் என்றும் ஸாஹிட் ஹமிடி உறுதியளித்துள்ளார்.








