Dec 2, 2025
Thisaigal NewsYouTube
42வது ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்துகொண்டார்
தற்போதைய செய்திகள்

42வது ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்துகொண்டார்

Share:

இந்தோனேசியா, நூசா தெங்காரா தீமோர் பிரதேசத்தில் ஃபுலோரஸ் தீவில் மங்கரை பாராட் நகரில் இன்று தொடங்கி நாளை வரை நடைபெரும் 42 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்துகொண்டார்.

பிராந்திய குழுக்களுடன் பரஸ்பர அம்சம் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து விவாதிக்க பிரதமர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார். 10 ஆசியான் உறுப்பு நாடுகளில் இருந்து எட்டு அரசாங்கத் தலைவர்கள் இந்த 42 ஆவது உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்ற வேளையில், அழைப்பு விடுக்கப்படாத காரணத்தால் மியன்மாரும், வரும் மே 14 ஆம் தேதி தேர்தலை எதிர் நோக்கவிருக்கும் தாய்லாந்தும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.

பிராந்திய பொருளாதார பின்னடைவை வலுப் படுத்துவதிலும், தற்போதைய சவால்களை எதிர் கொள்வதிலும், வலுவான பிராந்தியத்தை உருவாக்குவதற்கான பல முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அந்தத் தலைவர்கள் தங்களின் 2 நாள் கூட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

Related News