கோலாலம்பூர், டிசம்பர்.23-
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆயுதப்படை சம்பந்தப்பட்ட சில குத்தகைத் திட்டங்கள் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அதிகாரிகள் இன்று தற்காப்பு அமைச்சில் பூர்வாங்க விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
2023-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ராணுவம் தொடர்பான பல்வேறு திட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் புகார்கள் குறித்து எஸ்பிஆர்எம் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
உயர்மட்ட ராணுவ அதிகாரி ஒருவரின் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளில் பெருமளவிலான பணம் டெபாசிட் செய்யப்பட்டதாக ஒரு சமூக ஆர்வலர் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திறந்த டெண்டர் முறையில் வழங்கப்பட்ட திட்டங்கள் மற்றும் ராணுவப் பொறுப்பு மையங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அதிகாரிகள் அமைச்சில் ஆய்வு செய்து வருகின்றனர்.
2009 ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் இந்தச் சோதனை இன்று காலை 11.30 மணிக்குத் தொடங்கியது.








