கியூபாவின் குவாந்தானாமோ பே சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு மலேசியர்களை தாயகம் கொண்டு வருவதற்கான பரிந்துரை இன்னும் ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தை அளவிலேயே உள்ளதால் அரசாங்கம் அது குறித்து இன்னும் எந்த முடிவும் செய்யவில்லை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பில் தனது அமைச்சு அமெரிக்க அதிகாரிகளுடன் தற்போது பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இதன் தொடர்பான மேம்பாடுகள் குறித்து அறிவிப்பதற்கு இன்னும் காலம் கனியவில்லை என்றும்
அவர் குறிப்பட்டுள்ளார்.








