கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் 4 நாட்களுக்கு குடிநீர் விநியோகத் தடை ஏற்படலாம் என்று ஆயேர் சிலாங்கூர் நிர்வாகம் அறிவித்துள்ளதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை என்று அந்த நீர் விநியோகிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
நீர் துண்டிப்பு ஏற்படப் போவதாக அயேர் சிலாங்கூர் நிறுவனத்தை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட வீடியோ, 2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டதாகும். குடிநீர் குழாய்க்களின் தரத்தை உயர்த்துவதற்காக 4 நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று வெளியிடப்பட்ட வீடியோவை சில தரப்பினர் தவறாக பயன்படுத்தி வருவதாக ஆயேர் சிலாங்கூர் விளக்கம் அளித்துள்ளது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


