கோலாலம்பூர், செப்டம்பர்.01-
சும்பாங்கான் ஆசாஸ் ரஹ்மா எனப்படும் சாரா நிதி உதவித் திட்டம், நேற்று ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 22 மில்லியன் மக்களுக்கு மைகாட் வழி தலா 100 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே இரவு 9.30 மணி வரை மக்கள் தாங்கள் தேர்வு செய்த கடைகளில் மொத்தம் 50 மில்லின் ரிங்கிட் வரை செலவிட்டுள்ளனர் என்று நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேற்று மட்டும் எட்டு லட்சத்து 50 ஆயிரம் பேர், சாரா திட்டத்தைப் பயன்படுத்தியுள்ளனர் என்று தரவுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.








