சிரம்பான், செப்டம்பர்.09-
சிரம்பான், செண்டாயான் டெக்வெல்லியில் நிகழ்ந்த தீ விபத்தில் SWM Environment Sdn. Bhd, நிறுவனத்திற்குச் சொந்தமான கிடங்கு மற்றும் நான்கு லோரிகள் அழிந்தன.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரத்தில் தீயைக் கட்டுப்படுத்தினர் என்று சிரம்பான் 2 தீயணைப்பு நிலையத் தலைவர் அஹ்மாட் கோமெய்னி கமாருட்ஸாமான் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என்பது உறுதிச் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








