Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பேச்சு சுதந்திரத்தை விவேகத்துடன் பயன்படுத்துங்கள்
தற்போதைய செய்திகள்

பேச்சு சுதந்திரத்தை விவேகத்துடன் பயன்படுத்துங்கள்

Share:

ஷா ஆலாம், ஆகஸ்ட்.30-

சமூக நல்லிணக்கத்தையும், நாட்டின் நிலைத்தன்மையையும் பேணுவதற்கு, அரசியலமைப்புச் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சு சுதந்திரத்தை விவேகத்துடன் பயன்படுத்துமாறு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டின் 68 ஆவது சுதந்திர தினத்தை வழங்கிய சிறப்புச் செய்தியில் சிலாங்கூர் சுல்தான் மேற்கண்ட அறைகூவலை விடுத்தார்.

தியாக சீலர்களால் போராடி பெறப்பட்ட சுதந்திரத்தின் உண்மையான பொருள் பதித்த அர்த்தத்தை மக்கள் என்றென்றும் நினைவு கூர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

சுதந்திரம் என்பது வெறும் அடையாளத்திற்கான கொண்டாட்டம் அல்ல, மாறாக ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புணர்ந்து, ஒற்றுமையுணர்வுடன் வலுவான அடையாளத்துடன் அதனைப் பேணிக் காக்க வேண்டிய ஒரு பெரிய அறங்காப்பு பணியாகும் என்று சுல்தான் வலியுறுத்தினார்.

Related News