Oct 17, 2026
Thisaigal NewsYouTube

51 கிலோ போதைப்பொருள் பறிமுதல், மூவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
51 கிலோ போதைப்பொருள் பறிமுதல், மூவர் கைது

சிலிம் ரீவர், நவ.14-


கடந்த திங்கட்கிழமை சிலிம் ரிவர் அருகே உள்ள புசாட் பெர்டாகாங்கான் சிலிம் பெர்டானா, தாமான் ஸ்ரீ ஜெயாவில் ஒரு தம்பதியர் சென்ற காரில் 51 கிலோவுக்கு மேல் எடையுள்ள மெத்தாம்ப்ஹெதமின் வகையைச் சேர்ந்த போதை பொருள் அடங்கிய 50 பிளாஸ்டிக் பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த பறிமுதல் நடவடிககையின் மூலம் அந்த தம்பதியர் உட்பட மூவரை போலீசார் கைது செய்து இருப்பதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ காவ் கோக் சின் கூறினார்.

போதைப்பொருளை விநியோகிக்கும் போக்குவரத்து பணியாளர்களாக வேலைசெய்து வந்ததாக நம்பப்படும் 25 முதல் 27 வயதுடைய இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் இதில் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட 51.97 கிலோ எடையுள்ள போதைப் பொருட்களின் மொத்த மதிப்பு 2 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளில் இருந்து போதைப் பொருள்களை கடத்துவதும், கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள உள்ளூர் சந்தைக்கு சாலை வழியாக விநியோகிப்பதும் இந்த கும்பலின் செயல்பாடாகும் என்று அவர் விளக்கினார்.

25 வயதுடைய முதல் சந்தேக நபர், ஒவ்வொரு விநியோகத்திற்கும் 2 ஆயிரம் ரிங்கிட்டை கூலியாகப் பெற்றதாகவும், 27 வயதுடைய மூன்றாவது சந்தேக நபருக்கு 100 ரிங்கிட் மட்டுமே ஊதியம் கிடைத்ததாகவும் காவ் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →