ஷா ஆலாம், அக்டோபர்.27-
சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறைக்கு, இவ்வாண்டில், மொத்தம் 1,219 மாணவர் ஒழுக்கக்கேடு புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில், 265 வழக்குகள், பகடி வதை தொடர்பானவை என்று அம்மாநில காவல்துறை துணைத் தலைவர் முகமட் ஸைனி அபு ஹசான் தெரிவித்துள்ளார்.
மொத்த வழக்குகளில், 41 சம்பவங்களுக்கு விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அவற்றில் 32 வழக்குகள் வன்முறை குற்றச்செயல்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், சிலாங்கூரில் சுமார் 9,97,000 (9 லட்சத்து 97 ஆயிரம்) மாணவர்களை 6,000 ஆசிரியர்கள் மட்டுமே கவனித்து வரும் நிலையில், ஒழுக்கக்கேடு புகார்களின் விகிதம் மிகக் குறைவு என்றும் ஸைனி குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில், மாநிலத்தின் பள்ளிகள் பெரும்பாலும் பாதுகாப்பாக உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








