நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பகாங்,பெலாங்ஙாய் சட்டமன்ற இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பகாங் மாநிலத்தில் பாரிசான் நேஷனலின் பலம் பொருந்திய கோட்டைகளில் ஒன்றாக பெலாங்ஙாய் சட்டமன்றத் தொகுதி விளங்குகிறது.
முந்தைய தேர்தல் முடிவுடன் ஒப்பிடுகையில் இந்த இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் பெறவிருக்கின்ற வாக்குகளின் எண்ணிக்கையில் ஓரளவு சரிவு ஏற்பட்டாலும் பாரிசான் நேஷனல் வெற்றி பெறுவது உறுதி என்று தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்த இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் 55.5 விழுக்காடு ஆதரவை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் பாரிசான் நேஷனல், பெரிக்காத்தான் நேஷனல் மற்றும் சுயேச்சை என மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.








