அரசாங்கத்தால் சப்சீடி வழங்கப்பட்ட டீசல் எண்ணெயை, அனுமதிக்கப்பட்ட லிட்டரை விட, அதிகமான லிட்டர் எண்ணெயைக் கிடங்கில் வைத்திருந்த நடவடிக்கையை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்வாதார செலவின நடவடிக்கை குழு கண்டறிந்துள்ளது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் லூகுட் தொழில்துறை பகுதியில், 60,000 லிட்டர் டீசல் எண்ணெய் மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்த போது, அந்த நிறுவனம் 98,840 லீட்டர் எண்ணெயை வைத்திருந்துள்ளது என உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்வாதார செலவினம் அமைச்சின் இயக்குனர் முகமட் ஸாஹீர் மஸ்லான் தெரிவித்தார்.
அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள அளவை மீறி அதிகமான அளவில் என்ணெயைப் பதிக்கி வைத்திருப்பது குற்றச் செயலாகும் என்றும் இதனால் நாட்டில் டீசல் எண்ணெய் விநியோகம் தடைப்படக்கூடும் என அவர் மேலும் கூறினார். இந்தச் சம்பவம் குறித்து தமது அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.








