Jul 29, 2026
Thisaigal NewsYouTube
தண்ணீர்மலை கோயிலுக்கு குலசேகரன் வருகை
தற்போதைய செய்திகள்

தண்ணீர்மலை கோயிலுக்கு குலசேகரன் வருகை

Share:

பினாங்கு, தைப்பூச விழா கொண்டாடுவதற்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள வேளையில் தண்ணீர் மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்கு சட்டத்துறை துணை அமைச்சரும், ஈப்போ பாராட் எம்.பி.யுமான எம். குலசேகரன் இன்று சிறப்பு வருகை புரிந்தார்.

துணை அமைச்சர் குலசேகரனை பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் RSN ராயர், துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் இரா.லிங்கேஸ்வரன் உட்பட ஆலயப் பொறுப்பாளர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர்.

முருகப்பெருமானின் உற்வச திருவிழாவான தைப்பூச விழாவிற்கு லட்சக் கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் தேவஸ்தானத்தின் ஏற்பாடுகளை கண்டறியும் பொருட்டு ஆலயத்திற்கு வருகை புரிந்த துணை அமைச்சர் குலசேகரனுக்கு தைப்பூச ஏற்பாடுகள் குறித்து அறப்பணி வாரியத்தலைவர் ராயரும், துணைத் தலைவர் லிங்ககேஸ்வரனும் விளக்கம் அளித்தனர்.

தவிர, தைப்பூச விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக ஆலய நிர்வாகத்தினர் செய்துள்ள ஏற்பாடுகள், தங்க இரத அலங்கரிப்புப்பணிகள், ஆலயத்தின் தூண்மைப்பணிகள் மற்றும் கடைசி நேர வேலைகள் குறித்து துணை அமைச்சர் குலசேகரனுக்கு ராயரும், லிங்கேஸ்வரனும் விளக்கம் அளித்ததுடன் ஆலய வளாகத்தை சுற்றிக் காண்பித்தனர்.

முன்னதாக, ஆலய சிறப்புப்பூஜையில் கலந்து கொண்ட குலசேகரனுக்கு மாலை, பொன்னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டது.

Related News

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு