கடந்த புதன்கிழமை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மஹாதீரின் இல்லத்தில் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹடி அவாங் நடத்திய சந்திப்பில் உள்நோக்கம் இருக்கின்றது என அமானா கட்சியின் தொலைதொடர்ப்பு இயக்குனர் காலீட் சமாட் கருத்து தெரிவித்துள்ளார். மஹாதீர் ஹடி அவாங்கின் நீண்ட நாள் பகையாளியாக இருந்த வந்த நிலையில் திடீரென மலாய் பிரகடனம் என்ற அடிப்படையில் கைகோர்த்து நிற்பதில் உள்நோக்கம் இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.
ஒருவேளை வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவது போல, பெர்சத்து கட்சியின் வங்கி கணக்கு ஊழல் தடுப்பு வாரியத்தால் முடக்கப்பட்டு விட்டதால், கட்சிக்குப் புதிய வகையில் மானியம் பெற ஹடி அவாங் மஹாதீரை நாடிச் சென்றிருக்கலாம் என காலீட் கூறினார்.








