வரும் சிலாங்கூர் மாநில சட்ட மன்ற தேர்தலில், ரவாங் தொகுதியின் நடப்பு சட்ட மன்ற உறுப்பினர் சுவான் வேய் கியாட்டிற்குப் பதிலாக, அந்தச் சட்டமன்ற தொகுதியில் தாம் போட்டியிடப் போவதாக கூறப்படுவதைக் கட்சியின் துணைத் தலைமை செயலாளர் டாக்டர் சத்தியப் பிரகாஷ் நடராஜன் மறுத்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருக்கும் பி.கே.ஆர். வேட்பாளர்கள் தொடர்பில், கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தான் முடிவுச் செய்வார் என்று டாக்டர் சத்தியப் பிரகாஷ் குறிப்பிட்டார்.
ரவாங் தொகுதியில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் குறித்து, இதுவரையில் எந்தவொரு அதிகாரப்பூர்வமான முடிவும் எடுக்கப்படவில்லை என்று கடந்த பொதுத் தேர்தலில் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்விக் கண்டவருமான டாக்டர் சத்தியப் பிரகாஷ் விளக்கினார்.

Related News

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் வங்கி நிர்வாகி கைது: எஸ்பிஆர்எம் நடவடிக்கை


