குளுவாங், டிசம்பர்.01-
ஜோகூர், குளுவாங்கில் கேபள்களைத் திருடி வந்ததாக நம்பப்படும் மூவரைப் போலீசார் வளைத்துப் பிடித்தனர். கடந்த சனிக்கிழமை குளுவாங், தாமான் குளுவாங் பாராட்டில் ஒரு வாழைத் தோப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் .
பிடிபட்ட மூன்று சந்தேகப் பேர்வழிகள் 27 க்கும் 33 க்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் என்று குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பகுதியில் கேபள் திருடு நடைபெறுவதாக ஆடவர் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கேபள் திருடர்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த மூவரையும் கைது செய்தது மூலம் இரும்புவெட்டி, இரண்டு பெரிய கோணிப்பை நிறைய கேபள் துண்டுகள், ஆயுதங்கள் முதலியப் பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்ததாக அவர் விளக்கினார்.








