கோலாலம்பூர், செப்டம்பர்.01-
நாட்டின் 68 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி அரசாங்கம் அறிவித்த 100 ரிங்கிட் சாரா உதவித் தொகை, நேற்று முதல் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த 100 ரிங்கிட் தொகையில் மைகாட் அட்டையைப் பயன்படுத்தி மக்கள், தங்களுக்குத்க் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
100 ரிங்கிட் சாரா உதவித் தொகையைப் பெறுவதற்கு நாடு முழுவதும் 2.2 மில்லியன் மக்கள் தகுதிப் பெற்றுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கடைகளில் மக்கள் மைகாட்டைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருப்பதை இன்று பரவலாகக் காண முடிந்தது.








