Jul 29, 2026
Thisaigal NewsYouTube
நீர் கட்டண உயர்வு, தண்ணீர் பிரச்னையை சமாளிக்க உதவும்
தற்போதைய செய்திகள்

நீர் கட்டண உயர்வு, தண்ணீர் பிரச்னையை சமாளிக்க உதவும்

Share:

கோத்தா பாரு,ஜன.22
பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தபடவிருக்கும் உள்நாட்டு நீர் கட்டண சீர்திருத்தம் ஒரு கன மீட்டருக்கு சராசரி 22 காசு விலையேற்றம் கிளந்தான் மாநிலத்தில் மக்கள் எதிர்கொள்ளும் தண்ணீர் பிரச்னையை கையாள்வதற்கு உதவும் என்று ஆயிர் கிலாந்தான் எஸ்டிஎன் பிஎச்டி நம்புகிறது.

இந்த கட்டண உயர்வு செலவுகளை ஈடுசெய்யவும், பழுதடைந்த குழாய்களை சரிசெய்யவும் பயன்படுத்தப்படும் என்று AKSB - யின் பொதுச் செயலாளர் இசானி இஸ்மாயில் தெரிவித்தார்.

தற்போது கிளந்தான் பகுதியில் ஏராளமான குழாய்கள் கசிந்து வருவதாகவும், கிடைக்கபெருகின்ற கூடுதல் வருமானத்தின் மூலம் AKSB- யால் இதனை சீர் செய்யும் பணியை துரிதப்படுத்த முடியும் என்று இசானி இஸ்மாயில் கூறினார்.

கிளந்தானில் உற்பத்தி செய்யப்படாத நீர் இழப்பின் விகிதம் இன்னும் 50 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் கசிவு குழாய்கள் சரிசெய்யப்படும் பொழுது இதன் விகிதம் குறைய வாய்ப்பு இருப்பதாக அவர் அறிவித்தார்.

இவ்வாரத்தில் குழாய்களை பழுதுபார்க்கும் பணிக்கான ஒப்பந்தக்காரர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக இசானி இஸ்மாயில் விவரித்தார்.

Related News

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது