Sep 24, 2026
Thisaigal NewsYouTube
கம்போங் கூச்சாயில் 53 வயது ஆடவர் உயிரிழப்பு: 3 வெளிநாட்டு மாணவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

கம்போங் கூச்சாயில் 53 வயது ஆடவர் உயிரிழப்பு: 3 வெளிநாட்டு மாணவர்கள் கைது

Share:

ஈப்போ, கம்போங் கூச்சாய் பகுதியில் 53 வயது உள்ளூர் ஆடவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 17 முதல் 20 வயதிற்குட்பட்ட மூன்று வெளிநாட்டு மாணவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி, இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் நஜிப் ஹம்ஸா தெரிவித்துள்ளார்.

காயமடைந்த நிலையில் திறந்தவெளிப் பகுதியில் கிடந்த அந்த ஆடவரை பொதுமக்கள் கண்டெடுத்ததாகவும், அவரது முகத்தில் காயங்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், செப்டம்பர் 22-ஆம் தேதி, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் அந்த ஆடவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

பிரேதப் பரிசோதனையில், தலையில் ஏற்பட்ட கடுமையான தாக்குதலால் ஏற்பட்ட காயங்களே உயிரிழப்புக்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட மூன்று வெளிநாட்டு மாணவர்களும் ஈப்போவில் உள்ள தனியார் உயர்கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News