Dec 3, 2025
Thisaigal NewsYouTube
காயத்திற்கு ஆளானார் ஸ்பெயின் சுற்றுப்பயணி
தற்போதைய செய்திகள்

காயத்திற்கு ஆளானார் ஸ்பெயின் சுற்றுப்பயணி

Share:

ஸ்பெயின் சுற்றுப்பயணி ஒருவர் கேமரன் மலை வனப்பகுதிலிருந்து கீழே இறங்கும் போது தவறி விழுந்து கடும் காயத்திற்கு ஆளானார்.

ஒரு மலையேறியான அந்த ஸ்பெயின் பிரஜை கூனோங் ஜாசார் மலையிலிருந்து கீழே இறங்கும் போது கால் இடறி விழுந்ததில் தோள்பட்டையில் கடும் காயத்திற்கு இலக்கானார். இதனால் தொடர்ந்து நடக்க முடியாமால் அவர் பெரும் அவதிக்குள்ளானார்.

முகியூதே உன்சூ ஜுவான் சைமன் என்ற 56 வயதுடைய அந்த நபர் பின்னர் தீயணைப்பு, மீட்புப் படையினரின் உதவியுடன் அந்த மலைப்பகுதிலிருந்து ஸ்ட்ரெச்சர் மூலம் மலையடிவாரத்திற்கு தூக்கி வரப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

இன்று காலை 10:30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அந்த ஸ்பெயின் பிரஜை, தனி ஒரு நபராக மலையேறும் நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.

Related News