மக்களுக்குச் சேவை செய்வதற்காக எதிர்கட்சியினருக்கு கொடுக்கப்படும் மானியத்தை வழங்க ஏன் நடப்பு அரசாங்கம் தாமதம் படுத்துகின்றது என்று அராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ஷஹிடான் காசீம் கேள்வி எழுப்பினார். எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் பகுதியில் வாழும் மக்களுக்கு உதவி செய்வதற்காக, அரசாங்கம் ஒதுக்கும் மானியம் இன்னும் அவர்களை வந்து சேரவில்லை இல்லை என்று அவர் மேலும் கூறினார்.
நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டபின் அந்த மானியத்தை வழங்க அரசாங்க திட்டமிட்டு தாமதம் படுத்துவதாக ஷஹிடான் காசீம் குற்றம் சாட்டினார். அது மக்களின் பணம், மக்களுக்குச் சேரவில்லை எனில், இறந்தபின் அவர்கள் கடவுளுக்குப் பதில் சொல்ல வேண்டி வரும் என்றும், நடப்பு அரசாங்கம் பாவங்களை சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் மேலும் விவரித்தார்.








