கோலாலம்பூர், அக்டோபர்.14-
கடந்த 9 மாதங்களில் பதிவான 52,000 வர்த்தகக் குற்ற வழக்குகளில், சுமார் 3.6 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய காவல் துறைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, இது 81.6 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இந்த வர்த்தகக் குற்ற வழக்குகளில் 80% காதல் மோசடிகள் மற்றும் முதலீட்டு மோசடிகள் உள்ளிட்ட இணைய மோசடிகள் என்றும் புக்கிட் அமானில் இன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் காலிட் இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், இவ்வகை மோசடிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களின் உணர்ச்சிகளையும், நம்பிக்கைகளையும் பயன்படுத்தி ஏமாற்றப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.








