Oct 16, 2026
Thisaigal NewsYouTube

தம்பதியரும் டாக்சியோட்டியும் கருகி மாண்டனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தம்பதியரும் டாக்சியோட்டியும் கருகி மாண்டனர்

மெர்லிமாவ், நவ. 28-


ஒரு தம்பதியரை ஏற்றிச்சென்ற டாக்சி ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்துக்கொண்டதில் அந்த தம்பதியரும், டாக்சியோட்டியும் கருகி மாண்டனர்.

இச்சம்பவம் இன்று காலை 9.15 மணியளவில் மலாக்கா, ஜாசின், ஜாலான் ஜாசின் மெர்லிமாவ், கம்போங் லஞ்சாங்கில் நிகழ்ந்தது.

இதில் 84 வயது ஹுசாலி உமார் என்ற முதியவரும், அவரின் 61 வயது மனைவி மாஸ்துரா சாயிட் மற்றும் ஒரு டாக்சியோட்டியான 71 வயது எஸ். சுப்பிரமணியம் ஆகியோர் கருகி மாண்டனர்.

மூவரும் பயணம் செய்த கார், செமுஜுக்கிலிருந்து மெர்லிமாவை நோக்கி சென்று கொண்டிருந்த போது, அவர்கள் பயணித்த புரோட்டோன் ஈஸ்வரா கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்துக்கொண்டதாக நம்பப்படுகிறது.

மூவருமே சம்பவ இடத்திலேயே கருகி மாண்டதாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் அகமட் ஜமில் ராட்ஷி தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →