Jun 30, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா பாதுகாப்பாக உள்ளது" - மத்திய கிழக்கு பதற்றங்களுக்கு இடையே போலீஸ் படைத் தலைவர் உறுதி
தற்போதைய செய்திகள்

மலேசியா பாதுகாப்பாக உள்ளது" - மத்திய கிழக்கு பதற்றங்களுக்கு இடையே போலீஸ் படைத் தலைவர் உறுதி

Share:

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், மலேசியாவின் பாதுகாப்பு நிலைமை சீராகவும் உறுதியாகவும் இருப்பதாக போலீஸ் படைத் டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள போலீஸ் துறை தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

உலகளாவிய பொருளாதாரத் தாக்கங்கள் மலேசியாவையும் பாதிக்கலாம் என்பதால், பொதுமக்கள் அன்றாட நடவடிக்கைகளில் எச்சரிக்கையுடனும், சிக்கனத்துடனும் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் பாதுகாப்பிற்கும் பொருளாதார நிலைத்தன்மைக்கும் பல்லின மக்களிடையே நிலவும் ஒற்றுமையே மிகச்சிறந்த கேடயம் என ஐஜிபி வலியுறுத்தினார்.

'மீடியா பிரைமா' நிறுவனத்திற்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ வருகையின் போது டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் இந்த விவரங்களை வெளியிட்டார்.

Related News